என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » குழந்தைகள் பெண்கள் மீட்பு
நீங்கள் தேடியது "குழந்தைகள் பெண்கள் மீட்பு"
கடந்த 6 மாதங்களில் ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள், 52 பெண்களை மீட்டு பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
ரெயில் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீட்கப்பட்டது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 6 மாதத்தில் பயணிகள் தவறவிட்ட 1,385 உடமைகளை மீட்டு தந்துள்ளனர். ரெயில் பயணத்தின் போது மருத்துவ உதவி தேவைப்பட்ட 735 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பல்வேறு பிரச்சினைகளுக்காக வீடுகளை விட்டு ஓடிவந்து ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள் மற்றும் 52 பெண்களை மீட்டு பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ரெயில் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்ததோடு, குற்றத்தில் ஈடுபட்ட 133 பேரை கைது செய்தனர்.
ரூ.5 லட்சம் மதிப்பிலான ரெயில்வே சொத்துக்களையும் மீட்டுள்ளனர். 51 ஆயிரத்து 701 விதிமீறல் சம்பவங்களில் தொடர்புடையோரிடம் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 5 ஆயிரத்து 256 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உதவி எண் ‘182’ மூலம் 368 புகார்களும், ‘டுவிட்டர்’ மூலம் 501 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

×

X